Tuesday, March 22, 2011

பொய்மான் கரடு



இதுவரை நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் நாவல். பொன்னியின் செல்வன் நாவல் படித்ததிலிருந்தே எல்லோரையும் போலவே எனக்கும் கல்கி அவர்களின் மற்ற படைப்புகளையும் படிக்க வேண்டும் எ‌ன்ற ஆர்வம் இருந்துவந்தது. கடந்தவாரம்தான் அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. கல்கி எழுதிய "பொய்மான் கரடு" என்னும் நாவலை  இன்றைக்குதான் chennailibrary எ‌ன்ற இணையதளத்தில் ஆன்லைனிலேயே படித்துமுடித்தேன்.


சேலத்திலிருந்து நாமக்கல் போகும் வழியில் பொய்மான் கரடு எ‌ன்ற ஒன்றை கல்கிக்கு காட்டுகிறார் கார் ஒட்டுனர். பொய்மான் கரடு என்பது ஒரு பாறை. அந்த பாறையை தொலைவில் இருந்து பார்க்கும்போது மான் ஒ‌ன்று பாறையின் முன் நிற்பதுபோல் தோற்றம் அளிக்கிறது ஆனா‌‌‌ல் அருகில் சென்றால் அப்படி ஒன்று இருப்பதாக தோன்றவில்லை. இந்த விசித்திரமான பொய்மான் கரடு பற்றி ஏதாவது தெரியுமா எ‌ன்று ஒட்டுனரிடம்  கேட்க,  தனக்கு தெரிந்த கதையை ஒட்டுனர் கல்கிடம் கூறுவதாக புத்தகம் அமைந்திருகிறது.

செங்கோடன் கதையின் நாயகன், விவசாயி, கஞ்சன். செம்பவளவல்லி கதாநாயகி, செங்கோடன்மீது அதிக அன்பு கொண்டவள். இவர்களுக்கு இடையில் குமாரி பங்கஜா என்பவள் குறுக்கிடுகிறாள்.  குமாரி பங்கஜா மற்றும் அவளின் கூட்டாளிகளின் சதிவலையில் செங்கோடன் சிக்கி கொலைபழி சுமக்க நேரிடுகிறது. அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான்? குமாரி பங்கஜாவின் கூட்டாளிகள் யார்? அவர்களின் திட்டம் என்ன?  செங்கோடன் சேமித்து வைத்த புதையல் என்ன ஆனது? இந்த கேள்விகளுக்கெல்லாம் உரிய விடையை, தனக்குரிய நடையில் அழகாக எழுதியிருக்கிறார்.  

பொய்மான் கரடு - கல்கியின் படைப்பில் நான் படித்த பிடித்த இரண்டாவது சுவையான நாவல். Don't Miss it. Worth Reading.
 

6 comments:

கத்தார் சீனு said...

இந்த மாதிரி ஒரு புத்தகத்தலைப்ப இப்பதான் கேள்விபடுறேன்.
அனால் எனக்கு இணையத்தில் புத்தகங்கள் படிக்க பிடிக்காது...
புத்தகமா கிடைச்சா கண்டிப்பா படிக்கிறேன்....

சுதாகர் said...

உண்மைதான்.

புத்தகத்தின்வாயிலாக படிக்கும்பொழுது ஏற்படும் மனநிறைவு ஆன்லைனில் படிக்கும்பொழுது வராது.

வருகைக்கு நன்றி!

ஆச்சி ஸ்ரீதர் said...

தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html

SURYAJEEVA said...

தலைவரே தொடர்ந்து எழுதுங்களேன்

சுதாகர் said...

@thirumathi bs sridhar

வருகைக்கு நன்றி!

சுதாகர் said...

@suryajeeva

வருகைக்கு நன்றி!