Thursday, April 14, 2011

தமிழக தேர்தல் 2011



இந்தவருடம் அக்டோபரில்தான் ஆண்டு விடுமுறைக்கு செல்வதாக இருந்தேன். ஆனால் புதிய ப்ராஜெக்ட் வர சற்று தாமதமானதாலும், சொந்தவேலைகள் கொஞ்சம் இருந்ததாலும் திடிரென முடிவெடுத்து கடந்த ஞாயிற்றுகிழமையே குடும்பத்துடன் கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டேன்.

ஏப்ரல் 13ல் தமிழகத்திற்கு தேர்தல் நடக்கவிருப்பது ஏற்கனவே தெரிந்து இருந்ததால், சென்னை வந்ததிலிருந்தே எப்போது ஒட்டு போடுவோம் என்று எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருந்தது. ஒட்டு போடுவேன் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கவே இல்லை. எல்லாம் எதிர்பாராமலே நடந்த ஒன்று. வடசென்னை பாராளமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தொகுதி சீரமைப்பில் புதிதாக உருவான கொளத்தூர் தொகுதிதான் என்னுடையது. இந்த தொகுதியில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுவதால் ஸ்டார் அந்தஸ்து பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.



 
வாக்குச்சாவடி எங்கள் வீட்டு அருகிலேயே இருந்த தனியார் பள்ளி ஒன்றில் அமைந்து இருந்தது. ஒட்டு பதிவு தொடங்கும் நேரம் காலை 8 மணி என்றாலும் 7.30 மணியில் இருந்தே மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்றுகொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது. நான் தொடக்கத்தில் கூட்டம் இருக்கும் பிறகு குறைந்து விடும் என்று நினைத்து, காலை உணவை அருந்திவிட்டு மனைவியுடன் பொறுமையாக 11 மணிக்கு சென்றேன். அங்கு போய் பார்த்தல் மிக நீண்ட வரிசையில் வளைந்து வளைந்து கூட்டம் நின்றிருப்பதை பார்த்தவுடன் மலைப்பாக இருந்தது சரி வேறு வழியில்லாமல் வரிசையில் நின்று இருவரும் ஒட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வர ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.

வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது பெரியவர் ஒருவர், இந்த தேர்தலில் தமிழக தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் மிக சிறப்பாக இருந்ததாக பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் அவர் சொல்வது சரி என்றுதான் பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு தேர்தல் கமிஷன் சப்தமில்லாமல் நிறைய சாதித்து இருக்கிறது. குறிப்பாக வோட்டுக்கு பணம் கொடுப்பதை தவிர்பதற்காக (முழுமையாக தவிர்க்கமுடியாமல் போனாலும்) அவர்கள் எடுத்த முயற்சி பாராட்டுகுரியது, நான் சிறுவனாக இருந்தபோது ஒவ்வொரு வெள்ளை சுவரையும் விடாமல் அரசியல் கட்சிகள் நீளநிறத்தில் சின்னங்களை வரைந்து நாசம் செய்ததும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போதேல்லாம் அந்த மாதிரி எதுவும் கிடையாது. ஒலி பெருக்கிகளின் தொல்லை கிடையாது, ஆளும் கட்சிக்கு சாதகமாக வேலை செய்யும் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்வது, இப்படி தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தியது என ஒவ்வொன்றும் பாராட்ட கூடியது.


 
சாதாரண டம்மி கமிஷனாக இருந்த தேர்தல் கமிஷனை இன்று பவர்புல் கமிஷனாக மாறுவதற்கு மிகமுக்கியமான காரணமாக திகழ்ந்தவர் தமிழகத்தை சேர்ந்த முன்னால் தலைமை தேர்தல் அதிகாரி திரு.T.N.சேஷன். அன்றிலிருந்து இன்றுவரை தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தை படிப்படியாக பயன்படுத்தி கொண்டுவருகிறது. தேர்தல் கமிஷன் இன்னும் தனது உச்சகட்ட அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.


இந்த தேர்தலில் 77.4% சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்பது ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும் 22.6% பேர் வாக்களிக்க வில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஆகவே, இனிவரும் காலங்களில் ஒட்டு போடுவதை தேர்தல் கமிஷன் கட்டாயமாக்க வழிவகை செய்யவேண்டும். தங்களுக்கு ஏதோ சம்பந்தமில்லாத ஒன்று என்று மக்களும் இறுந்துவிடகூடாது. தங்களது வாக்குரிமையை அவர்கள் சரியாக பயன்படுத்தவேண்டும். எந்த வேட்பாளர்கள்மீதும் ஒட்டுபோடா விருப்பம் இல்லை என்றால் 49-O சட்டத்தின் படி அதை பதிவு செய்யவேண்டும். ஜனநாயகம் தழைக்க மக்களின் பங்களிப்பும் நிச்சயம் அவசியம். அதற்கு ஜனநாயகம் அளித்திருக்கும் உரிமைகளை மக்கள் பயன்படுத்துவது மிக மிக அவசியம்.

குறிப்பு: இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் (சேஷன் புகைப்படம் தவிர ) வாக்குச்சாவடியில் நான் வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது எடுத்தது

 

Tuesday, April 12, 2011

மறந்துவிடாதீர்! மறந்துவிடாதீர்!


அன்புமிக்க பெரியோர்களே, சகோதர சகோதரிகளே, இந்த தேசத்தின் தூண்களான இளைஞர் கூட்டங்களே, நாளை நடக்கவிருக்கும் தமிழக சட்டசபைக்கான தேர்தலில் ஒவொருவரும் மறக்காமல் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள். வாக்களிப்பது நம் உரிமை. நம் ஜனநாயகத்தின் கடமை. நம்மை ஆள்பவரை தேர்ந்தெடுப்பது நமது பொறுப்பு. உழலற்ற சமுதாயம் அமைய, மக்களையும், நாட்டையும் வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லும் சுயநலமற்ற தலைவர்கள் இந்நாட்டிற்கு தேவை.

நல்ல வாய்ப்பை தவரவிடாதிர் ! மாற்றம் தேவை மறந்துவிடதிர்!

Sunday, April 03, 2011

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !




நேற்று இரவு இந்தியா உலககோப்பை வென்றவுடன் சுட சுட செய்தியை பதிவு செய்யலாம் என்று கம்ப்யூட்டரை ஓபன் செய்தேன். அதற்குள் மனைவி  சற்று கோபத்துடன், இவ்வளவு நேரம் டி.வி. பார்த்தது போதாதா இப்ப கம்ப்யூட்டரை வேற நீங்க ஓபன் பண்ணனுமா என்று கேட்டவுடன் அப்படியே மூடிவிட்டேன் . அதற்கு பிறகு இன்று அலுவலகம் சென்றுவிட்டு சாயங்காலம் வந்தவுடன் இந்த பதிவை இப்பொழுது எழுதிக்கொண்டிருகிறேன்.

என்ன ஆட்டம்! என்ன ஆட்டம்! கண்கொள்ளா  காட்சி. நம் இந்தியா அணி கலக்கலா வெற்றி பெறுவதை பார்க்கும் போது உடம்பெல்லாம் சிலுத்து போச்சு. நேற்று தூங்கும்போது கூட ஒரே கிரிக்கெட் கனவாகவே வந்து கொண்டுடிருந்தது. இன்னைக்கு ஆபீஸ்ல வேற இந்தியா அணி வெற்றி பெற்றதை கேக் வெட்டி மகிழ்ச்சியாய் கொண்டாடினோம். 1983ல சின்ன பசங்களா இருந்த எங்க வயசு ஆட்களுக்கு  இந்தியா வெற்றிபெற்றதை நேர்ல பார்த்து அனுபவிக்கிற வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆட்டத்தை ஒரு ஓவர் விடாம முழுசா பார்த்து முடிச்சேன்.

நேற்று தோனி டாஸ் போடும்போது சங்ககரா என்ன தூங்கிட்டு  இருந்தாரான்னு தெரியல. டாஸ் விண் பண்ணிட்டதா நெனச்சி சங்ககராகிட்ட தோனி கைகொடுத்தா அந்த மனுஷன் ஏதோ ஊமை மாதிரி பாவ்ல பண்ணிட்டு டாஸ திருப்பி போடா வச்சிட்டாப்ள. இரண்டாவது முறை டாஸ போடும்போது சங்ககரா ஜெய்சதபாத்து   நிச்சயமா இந்தியா ரசிகர்கள் கடுப்பாய் இருந்திருபாங்கனு சொலவேண்டிய அவசியமே இல்ல. ஒருவேள நாம டாஸ விண்பண்ணியிருந்த நிச்சயமா பேட்டிங் எடுத்திருப்போம். ஆனா அந்த மாதிரி எதுவும் நடக்கல.

முதல்ல  விளையாடின இலங்கை அணி, ரொம்ப பொறுமையாவும் நிதானமாவும் விளையாடி 43.3 ஓவர்ல 200 ரன்கள் அடித்தனர். அதுவரைக்கும் சூப்பரா பௌலிங் மற்றும் பில்டிங் பண்ண நம்ம இந்தியா அணி அடுத்த 6 ஓவரால 75 ரன்களை மலமலன்னு கொடுத்து ரொம்ப நெருக்கடிக்கு ஆளாகி, 121 கோடி மக்களையும் ரொம்ப டென்ஷன் ஆக்கிட்டாங்க. இலங்கை அணியின் இந்த டிசன்ட் ஸ்கோர்க்கு மிக முக்கிய காரணம் ஜெயவர்தனவோட சதம். நிச்சயம் பாராட்ட படவேண்டிய ஒன்று.

அடுத்து விளையாடிய நம்ப அணி, சேவாகையும் சச்சினையும் 31 ரன்களில் இழந்துவுடன் எப்போதும் போலவே நம்ம மக்கள் டி.வி. ஐ ஆப் பண்ணி இருப்பாங்க ஆனா நன் ரொம்ப மன உறுதியோட பார்த்தேன். கௌதம் காம்பிரும் விராட் கோலியும் அபாரம விளையாடினாங்க. கோலி அவுட் ஆனவுடன் களம் இறங்கிய தோனி இந்தியா அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தோனி உண்மையிலேயே மச்சகாரர்தான். உலக கோப்பை போட்டியில இதுவரை விளையாடாத தோனி இன்னைக்கு பார்த்து விளையடி வெற்றி பெற்றது சத்தியமா எதிர்பார்க்காத ஒன்று. மேன் ஆப் தி மேச்சு வேற. என்ன! கௌதம் காம்பிர் சதத்தை மிஸ் பண்ணதுதான் கொஞ்சம் வேதனையா இருந்தது. மற்றபடி இது ஒரு அசத்தாலான டீம் வொர்க்.

அப்புறம், சச்சினின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. விராத் கோலி கூறியதை போல 21 வருடங்களா  இந்தியாவின் சுமையை தன் தோள்களில் சுமந்து கொண்டிருந்த சச்சின் முகத்தில் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போது மன நிறைவாக இருந்தது. டோனி சச்சினின் கரங்களால் கோப்பைஐ வாங்க சொல்லி இருந்திருந்தால் எல்லோர் மனத்திலும் நிலைத்து நின்றிருப்பார். அனால் அப்படி அவர் செய்யவில்லை.
    

இப்படி, இன்னும் சொல்லவேண்டியது நிறைய இருக்கு. எழுதிட்டே போகலாம் ஆனா ரொம்ப போர் அடிச்சுடும் அதனால முடிச்சிக்குறேன்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு மலர்ச்செண்டோடு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.