நேற்று இரவு இந்தியா உலககோப்பை வென்றவுடன் சுட சுட செய்தியை பதிவு செய்யலாம் என்று கம்ப்யூட்டரை ஓபன் செய்தேன். அதற்குள் மனைவி சற்று கோபத்துடன், இவ்வளவு நேரம் டி.வி. பார்த்தது போதாதா இப்ப கம்ப்யூட்டரை வேற நீங்க ஓபன் பண்ணனுமா என்று கேட்டவுடன் அப்படியே மூடிவிட்டேன் . அதற்கு பிறகு இன்று அலுவலகம் சென்றுவிட்டு சாயங்காலம் வந்தவுடன் இந்த பதிவை இப்பொழுது எழுதிக்கொண்டிருகிறேன்.
என்ன ஆட்டம்! என்ன ஆட்டம்! கண்கொள்ளா காட்சி. நம் இந்தியா அணி கலக்கலா வெற்றி பெறுவதை பார்க்கும் போது உடம்பெல்லாம் சிலுத்து போச்சு. நேற்று தூங்கும்போது கூட ஒரே கிரிக்கெட் கனவாகவே வந்து கொண்டுடிருந்தது. இன்னைக்கு ஆபீஸ்ல வேற இந்தியா அணி வெற்றி பெற்றதை கேக் வெட்டி மகிழ்ச்சியாய் கொண்டாடினோம். 1983ல சின்ன பசங்களா இருந்த எங்க வயசு ஆட்களுக்கு இந்தியா வெற்றிபெற்றதை நேர்ல பார்த்து அனுபவிக்கிற வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆட்டத்தை ஒரு ஓவர் விடாம முழுசா பார்த்து முடிச்சேன்.
நேற்று தோனி டாஸ் போடும்போது சங்ககரா என்ன தூங்கிட்டு இருந்தாரான்னு தெரியல. டாஸ் விண் பண்ணிட்டதா நெனச்சி சங்ககராகிட்ட தோனி கைகொடுத்தா அந்த மனுஷன் ஏதோ ஊமை மாதிரி பாவ்ல பண்ணிட்டு டாஸ திருப்பி போடா வச்சிட்டாப்ள. இரண்டாவது முறை டாஸ போடும்போது சங்ககரா ஜெய்சதபாத்து நிச்சயமா இந்தியா ரசிகர்கள் கடுப்பாய் இருந்திருபாங்கனு சொலவேண்டிய அவசியமே இல்ல. ஒருவேள நாம டாஸ விண்பண்ணியிருந்த நிச்சயமா பேட்டிங் எடுத்திருப்போம். ஆனா அந்த மாதிரி எதுவும் நடக்கல.
முதல்ல விளையாடின இலங்கை அணி, ரொம்ப பொறுமையாவும் நிதானமாவும் விளையாடி 43.3 ஓவர்ல 200 ரன்கள் அடித்தனர். அதுவரைக்கும் சூப்பரா பௌலிங் மற்றும் பில்டிங் பண்ண நம்ம இந்தியா அணி அடுத்த 6 ஓவரால 75 ரன்களை மலமலன்னு கொடுத்து ரொம்ப நெருக்கடிக்கு ஆளாகி, 121 கோடி மக்களையும் ரொம்ப டென்ஷன் ஆக்கிட்டாங்க. இலங்கை அணியின் இந்த டிசன்ட் ஸ்கோர்க்கு மிக முக்கிய காரணம் ஜெயவர்தனவோட சதம். நிச்சயம் பாராட்ட படவேண்டிய ஒன்று.
அடுத்து விளையாடிய நம்ப அணி, சேவாகையும் சச்சினையும் 31 ரன்களில் இழந்துவுடன் எப்போதும் போலவே நம்ம மக்கள் டி.வி. ஐ ஆப் பண்ணி இருப்பாங்க ஆனா நன் ரொம்ப மன உறுதியோட பார்த்தேன். கௌதம் காம்பிரும் விராட் கோலியும் அபாரம விளையாடினாங்க. கோலி அவுட் ஆனவுடன் களம் இறங்கிய தோனி இந்தியா அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தோனி உண்மையிலேயே மச்சகாரர்தான். உலக கோப்பை போட்டியில இதுவரை விளையாடாத தோனி இன்னைக்கு பார்த்து விளையடி வெற்றி பெற்றது சத்தியமா எதிர்பார்க்காத ஒன்று. மேன் ஆப் தி மேச்சு வேற. என்ன! கௌதம் காம்பிர் சதத்தை மிஸ் பண்ணதுதான் கொஞ்சம் வேதனையா இருந்தது. மற்றபடி இது ஒரு அசத்தாலான டீம் வொர்க்.
அப்புறம், சச்சினின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. விராத் கோலி கூறியதை போல 21 வருடங்களா இந்தியாவின் சுமையை தன் தோள்களில் சுமந்து கொண்டிருந்த சச்சின் முகத்தில் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போது மன நிறைவாக இருந்தது. டோனி சச்சினின் கரங்களால் கோப்பைஐ வாங்க சொல்லி இருந்திருந்தால் எல்லோர் மனத்திலும் நிலைத்து நின்றிருப்பார். அனால் அப்படி அவர் செய்யவில்லை.
அப்புறம், சச்சினின் நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. விராத் கோலி கூறியதை போல 21 வருடங்களா இந்தியாவின் சுமையை தன் தோள்களில் சுமந்து கொண்டிருந்த சச்சின் முகத்தில் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் பார்க்கும் போது மன நிறைவாக இருந்தது. டோனி சச்சினின் கரங்களால் கோப்பைஐ வாங்க சொல்லி இருந்திருந்தால் எல்லோர் மனத்திலும் நிலைத்து நின்றிருப்பார். அனால் அப்படி அவர் செய்யவில்லை.
இப்படி, இன்னும் சொல்லவேண்டியது நிறைய இருக்கு. எழுதிட்டே போகலாம் ஆனா ரொம்ப போர் அடிச்சுடும் அதனால முடிச்சிக்குறேன்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு மலர்ச்செண்டோடு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
2 comments:
உலகக்கோப்பை வென்றது மட்டற்ற மகிழ்ச்சி தான்...ஆனாலும் தோனி, சச்சின் கையால் உலகக்கோப்பையை வாங்க சொல்லிருக்கலாம் என எதிர்பார்ப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.. பதிவெழுதி முடித்தவுடன் ஒரு முறை QC பண்ணிட்டு வெளியிட்டா கொஞ்சம் தவறுகள் குறையும்...(too many spelling mistakes)
கத்தார் சீனு, கருத்திற்கு நன்றி.
பிழைகளுக்கு மனிக்கவும்.உங்கள் யோசனை கருத்தில் கொள்கிறேன்.
Post a Comment