நேற்று காலை இந்தியா நேரப்படி சரியாக 11 மணியளவில் ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சச சுனாமி அலைகள் ஜப்பானின் வடகிழக்கு பகுதியை தாக்கியது. இதனால் பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு, மக்கள் மீளமுடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. முன்னுறு பேர்களின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், பசிபிக் பகுதிகளில் இருக்கும் மற்ற நாடுகளும் இன்னும் 24 மணிநேரத்திற்குள் சுனாமியால் தாக்ககுடும் என்பதால் அந்நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சுனாமி அலைகள் சுமார் 500 கி.மி. வேகத்தில், 20 முதல் 30 அடி வரை உயர்ந்து தாக்ககூடும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்திய, இலங்கை ஆகிய நாடுகளுக்கு, அபாயம் இல்லை.
இயற்கையின் இந்த மாபெரும் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளயிருக்கும், ஜப்பான் மற்றும் அந்நாட்டு குடிமக்களுக்க்காகவும் எல்லாம்வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.
2 comments:
பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.
சுனாமியை ஆழிப்பேரலைகள் என அழைக்கலாம்...
ஆழிப்பேரலைகள் மிக துல்லியமான தமிழாக்கம்...
தங்கள் வருகைக்கு நன்றி.
Post a Comment